10 new messages received
புதுசா கல்யாணம்
பண்ணவனுக்கு அவன் பொண்டாட்டி போல அழகி இல்லையாம்..., புதுசா போன் வாங்குனவனுக்கு
அத நோண்ட நேரம் பத்தலயாம்....
மோகம் முப்பது நாள்,
ஆசை அறுபது நாள்...
நோக்கியா முப்பது நாள்,
ஆப்பிள் அறுபது நாள்...
பாத்துக்கோ சித்தப்பா, SMART PHONE இல்லனா நீங்களும் அங்கிள் தான்
என்று சாம்சங் விளம்பரத்தை காட்டி சொன்னேன். அவர் அசால்ட்டா சொன்னார் என்ன
கலாய்ச்சுட்டாங்களாமா...
யாருக்கு யார் பல்ப்
கொடுத்ததுனு புரியாம நின்னேன்.
பாட்டிக்கு ஒரு போன்
வாங்கி கொடுத்தார் அப்பா. கொஞ்ச நாள் கழிச்சு எனக்கு பாட்டு கேக்குற போன்
வாங்கித்தானு கேட்டுச்சு, என் மொபைல்ல கொடுத்துட்டு நான் புதுசா வாங்கிக்கிட்டேன்.
இப்போ படம் பாக்குற போன் வேணும்னு கேக்குது... வேற வழி இல்ல, என் ஃபோன
கொடுத்துட்டு அதோட பழைய நோக்கியாவ வாங்கிக்க வேண்டியது தான்.
தகவல்
தொழில்நுட்பத்தின் சமீபத்திய சாதனை என்ன தெரியுமா..., என் பாட்டியையும்
பேச்சுப்புக்கில் (அதாங்க Facebook) இணைத்தது தான். அதைவிட கொடுமை அது மார்க்
சக்கர்பர்க்கின் பக்கத்திற்கு லைக் கொடுத்தது தான்.
ரொம்ப நாள் கஷ்டப்பட்டு, ஒரு பொண்ணோட போன் நம்பர வாங்கி, ஹாய்னு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்புன அதே ஸ்பீட்ல திரும்ப ரிப்ளே வரும் போது ப்ரகாசமா ஒன்னு எரியும் பாருங்க... விப்ரோ பல்ப்லாம் வேஸ்ட்டுங்க...
நண்பன் சமீபத்தில்
கேமரா க்ளாரிட்டிக்காக வாங்கிய போனில் இதுவரை ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை.
83 சதவிகித நோயாளிகள்,
மருத்துவ மனைகளில் சத்தமாக போனை உபயோகப் படுத்துபவர்களால் எரிச்சல் அடைகிறார்கள்
என்கிறது ஒரு ஆய்வறிக்கை.
ஒரு நாள் சாயங்காலம்
எங்க அக்காவுக்கு கால் பண்ணேன். கவிதான் எடுத்தான், ஆனா எதுவுமே பேசாம அழுதுட்டு
இருந்தான். ஏன்டா அழுவுறனு கேட்டதுக்கு, நான் வேன் மாறி ஏறிட்டேன் இப்போ மெடிக்கல்
காலேஜ்ல இருக்கேன் எப்படி வரதுனு தெரியல மாமா என்றான். சரி அங்கேயே இரு என்று
சொல்லி, சென்று அழைத்து வந்தேன். அக்கா வீட்ல பையன் காணா போனத பத்தி தெரியாம, ஃபோன்ன
காணோம்னு தேடிட்டு இருக்காங்க..., உள்ள நுழைஞ்சதும் அவனுக்கு அடி, ஃபோன்ன
ஸ்கூல்க்கு எடுத்துட்டு போகாதனு எத்தன தடவ சொல்றதுனு அக்கா அடிக்க ஆரம்பிச்சுட்டா.
அந்த ஃபோன் இல்லனா அவன கண்டுபிடிச்சு இருக்க முடியாது, போய் வேலைய பாருனு நான்
அக்காவ திட்டிவிட்டேன்.
என் இரண்டு நாட்கள்
விடுமுறையை அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டது இந்த செல்ஃபோன்.
பாத்துக்கோ சித்தப்பா, SMART PHONE இல்லனா நீங்களும் அங்கிள் தான் என்று சாம்சங் விளம்பரத்தை காட்டி சொன்னேன். அவர் அசால்ட்டா சொன்னார் என்ன கலாய்ச்சுட்டாங்களாமா...
ReplyDeleteயாருக்கு யார் பல்ப் கொடுத்ததுனு புரியாம நின்னேன். ;) Unmaiyave unga paati facebook la irukangala nanba... ;)
நோக்கியா முப்பது நாள், ஆப்பிள் அறுபது நாள்... Correctu than... :)
ReplyDeletethanks pri..
Delete