Sunday, 14 October 2012

எவனோ செஞ்சு வச்ச சதி


அயித்த மவதான் ஆயுசுக்கும்
என நினைச்சிருந்தேன்.
பாவி சிறுக்கி
பாசக்கயிர வீசி புட்டா...

தண்ணி தெளிச்சு
விரிச்ச எல இங்கிருக்க,
பந்தி வைக்க எங்கேயோ
முந்தி விரிச்சுப்புட்டா...

கெட்டது மனசு மட்டும்
இல்ல மாமா
அடுத்த வார்த்தைக்கு
அவ நாக்கு எழல,
அடைச்சுக்கிட்ட செவுலுல
அந்த வார்த்தையும்
வந்து விழல...

வெட்டி போட்டாவது
சேர்த்து வப்பேன்னு
வீராப்பா கிளம்பி நின்னேன்.

கெட்டிமேளம் கொட்டி
சாதிசனம் கூட்டி
தேதி குறிக்க வாரான்
மண்ணாங்கட்டி மாமன்.

மானம் போனா
மாமன் இருப்பானா – இல்ல
காத்துல கறைஞ்சது தான்
திரும்ப கற்பூரம் ஆயிருமா

விடுகதைக்கு விட தெரியல
எனக்கேதும் வழி புரியல
எவனோ செஞ்சு வச்ச சதிய
உன்கிட்ட விட்டுபுட்டேன் விதியே...

No comments:

Post a Comment