ஜன்னல் கம்பிகளின்
வழியே வெறித்திருக்கும்
அவளின் விழிகளில்
ஏதோ ஒன்று புதைந்திருக்கும்...
அவளின் சமையலறை சங்கீதத்தில்,
மெல்லிய சோகம் ஒன்று
இழைந்தோடி கொண்டே இருக்கும்..
அவள் பாடாத
மொட்டை மாடி இரவுகளும்..,
வெள்ளை நிலவும்,
எனக்கு பிடிக்கவில்லை..
அவள் ரசித்த
இளையராஜா பாடல்கள் எல்லாம்...,
எனக்கு பிடித்த
ரஹ்மான் பாடல்களாய் ஒலிக்கின்றன..
அவள் படித்த
பொன்னியின் செல்வனும்,
கருவாச்சி காவியமும்,
ஒரு மூலையில்
சீண்டுவோர் யாருமின்றி கிடக்கிறது
அவள் நினைவுகளை போலவே...
ஒரு விடுமுறை தினத்தில்
கணவனுடன் மீண்டும் வந்தாள்...
இன்றும் அவள் கண்களில்
அப்படியே தேங்கி நிற்கும் சோகமும்,
அது புதைத்து வைத்த ரகசியங்களும்...,
எனக்கு புரியவில்லை...
அவள் படித்த
ReplyDeleteபொன்னியின் செல்வனும்,
கருவாச்சி காவியமும்,
ஒரு மூலையில்
சீண்டுவோர் யாருமின்றி கிடக்கிறது
அவள் நினைவுகளை போலவே...
உங்க blog படிச்சதுகு அப்பறம் தான் பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சேன். உண்மையிலய நல்ல படைப்பு தான் நண்பா. நன்றி!! உங்க கிட்ட இருந்து இன்னும் நெறைய எதிர் பார்க்கின்றேன். இப்படிக்கு உங்கள் ரசிகை மாலினி.
5 பாகங்களையும் படித்து முடிக்கும் வரை நீங்கள் புத்தகத்தை கீழே வைக்க மாட்டீர்கள் என்பது என் சவால்....
Deleteஉண்மை தான் நண்பா!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete