திங்க கிழமை காலைல
அலார்ம் அடிச்சா, போன செவுத்துல அடிச்சு உடைச்சிருலாம்ன்ற அளவுக்கு கோவம் வருது...
உங்களுக்கு பிடித்த
பாடல் பிடிக்காமல் போக வேண்டுமா, அத காலர் ட்யூனாக செட் பண்ணுங்கள்.
சாலையை கடக்கும்
போதும், வண்டி ஓட்டும் போதும் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள்,
விபத்துகளுக்கான காரணிகளில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. முதலிடம் தலைக்கவசம்
அணியாதது. இந்த இரு காரணிகளாலும் அதிகம் விபத்திற்குள்ளானது பெண்கள்.
- சமீபத்திய சென்னை மாநகராட்சியின்
அறிக்கை.
ஏதோ கவிதன்ற பேர்ல
ஒன்னு எழுதி கனவுகள் இனிக்கட்டும் என்று நண்பர்களுக்கு இரவுகளில் குறுஞ்செய்தி
அனுப்புவது உண்டு. சிலசமயங்களில் வடஇந்திய தோழர்களுக்கும் அனுப்பிவிடுவேன்.
புரிகிறதோ இல்லையோ ஒருத்தன் மட்டும் கனவுகள் இனிக்கட்டும் என பதில் அனுப்புவான்.
தமிழ வளர்த்துவிட்ட திருப்தி.
ஆண்ட்ராய்டு போன்ல
ஆண்ட்ரியா போட்டோவ வச்சாலும் நமக்கு கால் பண்ண போரது நம்ம ஊர் கிழவி தான்.
ஸ்மார்ட் போன் கேட்ட தம்பிக்கு சித்தப்பாவின் பஞ்ச். நல்ல வேள நான் அவர்ட்ட ஐடியா
கேக்கல...
கிளம்பும்போது தவறுதலாக
என் மொபைல் கீழே விழுந்து சிதற..., கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போடா, சகுனமே
சரியில்லனு அக்கா சொன்னா... எப்படிடா டெக்னாலஜி வளர வளர மூடநம்பிக்கையையும்
சேர்த்து வளக்குறீங்க...
எவன் எவனோ பந்த்
நடத்துறான் இந்த செல்போன் கம்பனிகாரங்க ஒரு வாரத்துக்கு ஸ்டைரக் பண்ணா எப்பிடி
இருக்கும் ஒரு வினோத எண்ணம்...
ஷங்கர் படம் மாதிரி
பிரம்மாண்டமா நெனப்பு ஓடுது வார்த்தையில விவரிக்க முடில...
எனக்கு வாய்த்த
நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், எனக்கு பகல்ல கால் பண்ணவே மாட்டானுக..., ஆனா
நட்டநடு ராத்திரில கால் பண்ணி டார்ச்சர் பண்ணுவானுக..., சாம்பிள்க்கு இதோ...
தூங்கிட்டியா...
இப்பதான்டா படுத்தேன்
சொல்லிதொல...
அவ அம்மா
முளிச்சுட்டாங்களாம் பத்து நிமிசம் கழிச்சு கால் பண்றேன்னு சொன்னா அதான்
அதுக்குள்ள தூங்கிடகூடாதுல...
அதுக்கு எதுக்குடா
எனக்கு கால் பண்ண...
எனக்கு உன்னவிட்டா வேற
யாரு மச்சான் இருக்கா...
பத்து நிமிசம்
கழிச்சு...
மச்சான் குட்நைட்னு
மெசேஜ் அனுப்பிட்டா தூங்கிட்டானு நினைக்கிறேன், எனக்கும் தூக்கம் வருது. குட்நைட்
மச்சி கனவுகள் இனிக்கட்டும்...
அதுக்கு அப்புறம்
நீட்டி, மடக்கி, ஒருக்குணிச்சு, புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரேவே
வராது...
இன்னும் மூணு நாளைக்கி
மழ இல்ல, ஆனா மேகமூட்டம் இருக்கும் என அப்ளிக்கேசன பார்த்து வானிலை அறிக்கை
சொன்னேன்
ஆமா..., ரமணன் சொல்லியே
வாராத மழ இவர் சொல்லி வரபோகுதாக்கும், எலேய்.., நிலாவ சுத்தி பரிவட்டம்
கட்டிடுச்சு நாளைக்கி ராத்திரிகுள்ள மழ வருதா இல்லையானு மட்டும் பாரு...
சொல்லிவிட்டு வீராப்பா கடந்துபோனார் சித்தப்பா
ஆயிரம் பெரியார்
வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுனு முணகிகிட்டே படுத்தேன்.
விடுஞ்சு எழுந்து
பாத்தா வீதியெல்லாம் வெள்ளம்...
சாட்டிலைட்டுகே சவால்
விடுறாங்கபா நம்ம ஆளுங்க...
JP எனக்கும் அவருக்கும்
எப்பவுமே செட் ஆகாது...
ஜாவால INHERITANCE -க்கு சாம்பிள் ப்ரோக்ராம் எழுதி
போட்டுட்டு இருந்தாரு...
க்ளாஸ் னாலே என்னானு தெரியாது, இதுல
சூப்பர் க்ளாஸ் வேறயா, எவனோ கமெண்ட் அடிக்க, சிரிச்சுட்டானுக முன்னாடி
இருந்தவனுக..
க்ளாஸ்ல நமக்கு எதிரியே
இவனுங்க தான் சிரிச்சே சிக்க வச்சுருவானுக..
அவர் திரும்புனதும்
சிக்குனது நான் தான்...
ஏந்திரி இந்த சூப்பர்
க்ளாஸ்க்கு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ணு...
எனக்கென்ன தெரியும்
தலைய தொங்கபோட்டு நின்னேன்...
நெக்ஸ்ட்...
நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...
கடைசி ரோ ஃபுல்லா
எழுந்திருச்சு நின்னுடுச்சு.., எவனுக்கும் தெரியல...
ஒரு மாசமா க்ளாஸ் எடுக்குறேன்
ஒரு ஆப்ஜக்ட் க்ரீயேட் பண்ண தெரிலனா எதுக்கு நீங்கலாம் க்ளாஸ்க்கு வரீங்க...
உச்சகட்ட கோபத்தில் ஏதேதோ திட்டினார்...
எனக்குள்ள இருந்த
சிங்கத்த தட்ட்டி எழுப்பீட்டிங்க... அசோக்... உன் காலண்டர்ல குறிச்சு வச்சிக்கோ
இந்த நாள் உன் வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்... உனக்கும் எனக்கும் தர்ம யுத்தம்
ஆரம்பம் ஆயிடுச்சு....
கத்தி தொலச்சிடுச்சு,
ஷூ சாக்ஸ்க்குள்ள ஒளிச்சு வச்சிருந்த என் செல்போன்.
ஒழுங்கா வெளில
போயிடு..., இனிமே என் க்ளாஸ் பக்கமே எட்டி பாக்காத..., எதுவும் பேசாத வெளில
போயிடு..., அதுக்கு முன்னாடி அவ்ளோ கோவமா நான் அவர பாத்ததேயில்ல,
பாவம் அவருக்கு ரஜினிய
புடிக்காது போல இருக்கு...
No comments:
Post a Comment