10 new messages received
மூன்றில் இரண்டு பங்கு
செல்போன் வைத்திருக்கும் இந்தியர்கள்.
மூன்றில் ஒரு பங்கு கூட
இல்லை வீட்டில் கழிவறை வைத்திருக்கும் இந்தியர்கள்.
அட அதிகாரிங்களா..,
எங்களுக்கு இப்போ தேவ சுகாதாரம் தான்டா செல்போன் இல்ல...
தயவுசெய்து நண்பர்களே,
அலுவலகத்தில் மட்டும் அல்ல துக்க வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் போனை சைலண்ட்
மோட்லயே வைத்திருங்கள். நல்லது செய்ய முடியவில்லை என்றாலும் தீமையாவது செய்யாமல்
இருக்கலாமே...
பதினாறாம் வாய்ப்பாடு
வரை தலைகீழாய் ஒப்பித்தவன் நான், இன்று மளிகை சாமான் வாங்கிவிட்டு மீதி சில்லறையை
சரிபார்க்க கால்குலேட்டர் அப்ளிக்கேசனில் முயற்சித்து கொண்டிருக்கிறேன்.
வடஇந்திய தோழி
ஒருத்திக்கு நண்பன், ஒரு திருக்குறளை சொல்லி கொடுத்திருக்கிறான். அதை அவள்
என்னிடம் நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று என மழலைத்தனமாய்
சொல்லியதும் அத்தனை சந்தோசம் அவளுக்கு. அட இத்தனை நாள் நாம் இதை முயற்சித்ததே
இல்லையே என தோன்றிவிட்டது.
( சரி நமக்கு எத்தன
ஞாபகம் இருக்குனு சொல்லி பாத்தா 20 க்கு மேல ஞாபகம் வரல... தமிழ் தமிழ்னு பேசி
என்ன ப்ரயோஜனம்...)
முன்பெல்லாம்
வீட்டுக்கு வரேன்னு சொன்னா, இத வாங்கிட்டு வா அத வாங்கிட்டு வானு சொல்வாங்க
இப்பலாம் ஒரே வார்த்த தான் புதுசா செல்போன் வாங்கிட்டு வா...
என் போனில் ANGRY BIRD விளையாண்டால் மற்றவர்கள் நான் ANGRY BIRD ஆக மாறுவதை உணர்வார்களா...
நொடிக்கு ஒருமுறை உன்
குறுஞ்செய்தியை
தேடிப் பார்க்கின்றன
எந்தன் விரல்கள்.
இப்போதெல்லாம் நான்
பூஸ்டர் பேக் போடுவதேயில்லை. 1900 க்கு PORT என்று ஒரு மெசேஜ்
அனுப்பினால் அவர்களே நம்மை அழைத்து நமக்கு தேவையான பூஸ்டரை போட்டுவிடுகிறார்கள். (
அவர்கள் அழைக்கும் போது கொஞ்சம் கோபமாக பேசினால் நல்ல சலுகைகள் கிடைக்கலாம்...).
ஒரு அவசர பயணம் போனில்
சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது. என் வீட்டில், உறவுக்காரர்கள் என அனைவரும்
முயற்சித்து இருக்கிறார்கள். இரவு வீட்டிற்கு வந்தது சார்ஜ் போட்டவுடன் அப்பாவின்
அழைப்பு, நடந்ததை சொன்னதும் தான் நிம்மதி அடைந்தார்கள். இடைல எவனோ போட்டுவிட்ருக்கான்
நான் ஏதோ ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடி போயிட்டேன்னு..., அவன தான் தேடிட்டு இருக்கேன்.
மச்சி எங்கடா இருக்க...
நான் வடபழனில இருக்கேன்
டா...
படத்துக்கு போலாம்னு
சொன்னியே டா நான் உனக்காக இங்க மௌண்ட்ரோட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கேன்டா...
சாரி மச்சான் அப்பா
அவசரமா வேல விட்டுட்டாரு டா...
பேசிக்கொண்டே வந்ததில்
எதிரே வந்தவரை இடித்துவிட்டேன், சாரி கேட்க திரும்பினால் அசடு வழிய சிரிச்சுட்டு
இருக்கான் நண்பன்.
No comments:
Post a Comment