Monday, 26 March 2012

யாழிக்கு கவிதைகள்

என்னை தேடுவாள்
நான் பார்ப்பேன்
சில நாட்கள் பயணித்தோம்...
புன்னகை புரிவாள்
புரியாமல் தவிப்பேன்
சில நாட்கள் பயணித்தோம்..
காற்றில் விரல் அசைத்து
"ஹாய்" என்றொரு
கவிதை சொல்வாள்
சில நாட்கள் பயணித்தோம்..


உனக்கு என்ன பிடிக்கும்..
என்னிடம் கேட்டாள்..


நட்பு பிடிக்கும் என்றேன்
நண்பர்களை பிடிக்கும் என்றாள்..
காதல் பிடிக்கும் என்றேன்
காதலர்களை பிடிக்கும் என்றாள்..
இசை பிடிக்கும் என்றேன்
இசைப்புயலை பிடிக்கும் என்றாள்..
கவிதை பிடிக்கும் என்றேன்
கவியரசை பிடிக்கும் என்றாள்..
உன்னை பிடிக்கும் என்றேன்..
உன் புன்னகை பிடிக்கும் என்றாள்..

2 comments:

  1. macha yar andha aval??? anubavam kavithai aguthu!!!

    ReplyDelete