Wednesday, 21 March 2012

யாழிக்கு கவிதைகள்

                                                               மழையும் நீயும்..
மழையும் நீயும்..
கண் சிமிட்டாமல் ரசிக்கிறேன்..
இரண்டு அழகும் ஒன்றாய் கலப்பதை..

மழையை கண்டதும்
துளிர் விடும் இலைகள்
உனை கண்டதும் விரியும்
என் விழிகள்..

மழையில் குளித்த இலை
நுனியில் தேக்கி வைத்திருப்பது..
உன் கண்ணீர் துளிகளா.., இல்லை    
குளித்த பின் துடைக்க மறந்த
தேகம் தேக்கி வைத்த நீர்திவலைகளா..


கார்மேகங்களில் ஒளிந்து
மெலிதாய் எட்டி பார்த்தான் சூரியன்
நீ வெட்கப்பட்டு
என்னை பார்ப்பது போன்றே..

வானத்தின் அழுகை
பூமியின் மேல் அது கொண்ட காதல்
எனது அழுகை
நான் உன் மேல் கொண்ட காதல்..

வானத்தின் கண்ணீர் துளிகளை
ரசிக்கிறேன் நான்
என் கண்ணீர் துளிகளை
நீ ரசிப்பாயோ..!?

ஓர் இனிய மாலை நேரத்தில்
மதி மயங்கி
இருவரும் கலந்த போது
மேகங்கள் போர்வீரர்களை அனுப்பியது
நம்மை  பிரிக்க..
மழைத்துளிகள் அனைத்தும் முயற்சித்தது
நம் இடையே செல்ல..
அனைத்தையும் தோற்கடித்துவிட்டோம்
ஆனால் வியர்வை துளிகளை...

உயிரை சிலிர்க்க வைக்கும்
உன் மூச்சு காற்று பட்டு
உயிர் காற்றை சுவாசிக்க மறந்து
தவிக்கிறது தேகம்..

மேகமாய் தேக்கி வைத்த
நீரை எல்லாம்
அழுது தீர்த்தது வானம்..
தேக்கி வைத்த அழுகையை எல்லாம்
முத்தங்களாய் தீர்த்தேன் நான்..  

No comments:

Post a Comment