Tuesday, 22 May 2012

யாழிக்கு கவிதைகள்



நேரம் காலம் தெரியாமல்
அலைபேசியில் அழைக்கும்
நண்பனை என்ன செய்ய
கடற்கரை காற்றில் கரைகிறது
எனக்கான காதல் முத்தங்கள்..



காதல் கதைகள் படிக்கும் போது
நானே கதை நாயகன் ஆகிவிடுகிறேன்.
கதையில் திருப்பம் வந்து
வலி தந்தால்
இது என் காதல் இல்லை
என உணர்கிறேன்
இருந்தும் நான் உதிர்த்த
கண்ணீர் துளிகள் எதற்காக..



உறங்கிய பிறகு
மனம் திடீரென எழுப்பும்
இந்த பாடலை கேள் என..
அந்த பாடல்களின்
ஏதொ சில வரிகளில்
உன் ஞாபகங்கள்...

No comments:

Post a Comment