Wednesday, 21 March 2012

யாழிக்கு கவிதைகள்

                                                    உனக்காக ஒரு கவிதை..
உனக்காக ஒரு கவிதை எழுத
உலகம் தனித்து
உறவை மறந்து
உன்னை மட்டும் நினைத்து
உயரே சென்றேன்..

காற்றை மட்டும் துணையாய் கொண்டு
காடு நோக்கி நகர்ந்தேன்..
காற்றுடன் சிநேகம் பேசி
காதலை சொல்ல
வார்த்தைகள் கேட்டேன்..

காதோரமாய் கிசுகிசுத்த காற்று
நான் எழுத போகும் கவிதைகளுக்கு
மெட்டு தந்தது..

அருவியின் சாரலில்
மனதின் கறைகள் மறைந்தன..
கறைகள் எனும் கவலைகள் மறைந்தன..

கரைகள் இல்லா காட்டாறு
கடலை நோக்கி படையெடுக்க
மடைகள் உடைத்து
மனம் சென்றது
வார்த்தைகளை தேடி..

அருவி போல்
கொட்டிய வார்த்தைகளில்
உன்னை நனைக்க நினைத்தேன்
ஆனால் சாரல் மட்டும்
எடுத்து வந்தேன்..

கவிதை எழுதும் முன்னே
ஜோடி குயில்கள் இரண்டு
காற்றின் மெட்டிற்கு
ராகம் பாடியது..

ஆயிரம் கவிதைகள் எழுதினேன்
கம்பனின் கற்பனைகளை
கடன் வாங்கி...
ஒன்றும் பிடிக்காமல்
ஒற்றை வார்த்தையில் எழுதினேன்
காதல் என்று..

நான் எழுந்ததும்
காற்றின் மெட்டிற்கு
குயில்கள் பாடின
காதல் காதல் என்று...

No comments:

Post a Comment