நான்
எனது வாழ்க்கையில் ஒருமுறையேனும் இவர்களை சந்தித்து பேச விரும்பிகிறேன், அது அரை
நொடியோ அரை நாளோ.. சந்திக்க வேண்டும். நான் பார்த்து வியந்த மனிதர்கள் இவர்கள்.
என்னால் எளிதில் பார்க்க இயலா மனிதர்கள். ஆனால் இந்த ஆசையை என்னால்
கட்டுப்படுத்தவே முடியாமல் தினம் தவிக்கிறேன். எத்தனையோ வெற்றிகளும் விருதுகளும்
இவர்கள் காலடியில் இருந்தபோதும் எளிமை மாறாத மனிதர்கள்..
ஏ.ஆர்.ரஹ்மான்
நமக்கு என்று
வாழ்ந்துக் கொண்டிருந்த ஒற்றை உயிர் நம்மை தன்னந்தனியே விட்டு பிரிந்து செல்கையில்,
அதன் இழப்பை நாம் உணரும் ஒற்றை நொடியில்..., நாம் வாழ்வின் எந்த உச்சத்திற்கும்
செல்ல தயங்க மாட்டோம். நாம் எடுக்கும் தற்கொலை முடிவை கூட தடுக்க ஆள் இல்லாத தனிமை
அது. யார் சொன்னாலும் கேட்க முடியாத கொடுமை அது.
எனக்கும் அப்படி ஒரு நிலை வந்தது, அழுது ஆற்ற
முடியாத கண்ணீர் துளிகள் இமையிலேயே உறைந்துவிட்ட இரவினில் என் மனம் என்னிடம்
இல்லை.. சின்ன தயக்கம் கூட அந்த நொடியில் இருந்ததாய் நினைவினில் இல்லை.
இந்த வார்த்தைகளை
சொல்லவாவது நான் உங்களை சந்திக்க வேண்டும் ரஹ்மான் சார்...
“உன் இன்னிசை மட்டும்
இல்லை
என்றால்
நான்
என்றோ.. என்றோ.. இறந்திருப்பேன்..”
சின்ன வயசுல இருந்து இந்த ஆசையும் இருக்கு.. உங்க இசையமைப்புல
ஒரு பாட்டாவது எழுதனும் ரஹ்மான் சார். நடக்காதுனு தெரியும்.. ஆசை படுறதுக்க அளவு
இருக்கா.. ஆசையாவது பட்டு வப்போமே..
சச்சின்
டெண்டுல்கர்
22 வருசமா இன்னும் விளையாடிகிட்டே இருக்க ஒரே விளையாட்டு
வீரன் எனக்கு தெரிஞ்சு சச்சின் தான். இவர் கூட விளையாட ஆரம்பிச்சவங்க, இவருக்கு
அப்புறம் விளையாட வந்தவங்க எல்லாரும் காணம போய்ட்டாங்க.. ஆனா இன்னும் குழந்த
மாதிரி விளையாடிட்டு இருக்காரு..
கிரிக்கெட் ல
இனிமே சாதிக்க ஒன்னும் இல்ல ஆனா அந்த கர்வம் கொஞ்சம் கூட இல்லாத மனுசன் சார் எங்க
சச்சின். இவரு விளையாட ஆரம்பிக்கும்போது பிறக்காத பசங்க கூட இவரு கூட
பார்ட்னெர்ஷிப் போட்டா செஞ்சுரி அடிக்கிறானுக.., இப்படி ஈகொ இல்லாத மனுசன பாக்க
முடியுமா..
சச்சின்
இல்லாத கிரிக்கெட் என்னால நினச்சு கூட பாக்க முடில..
WORLD CUP WON பண்ண உடன
சச்சின தோழ்ல தூக்கி வச்சுகிட்டு சுத்துனத பத்தி விராட் கோலி சொன்னது தான்
ஞாபகத்துக்கு வருது..
“ 20 வருசமா இந்தியன் கிரிக்கெட்ட தன் தோழ்ல தாங்குனவர
நாங்க எங்க தோழ்ல தாங்க கூடாதா..?”
இந்த இடத்துல நான் இன்னொருத்தருக்கும் நன்றி சொல்ல
விரும்புறேன்..
“ அவரு அவுட்டாகி தலைகுனிஞ்சு நடந்து வந்தத பாத்துட்டு
என்னால்
சும்மா இருக்க முடியல” என்று சொல்லி எங்களுக்கு CUP
வாங்கி
கொடுத்த M.S.DHONI தான் அவரு..
ஒரே ஒரு பந்தாவது நான் உங்களுக்கு போடணும் சார்..
இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஸ்டீவ் வாக், க்ளென்
மெக்ராத் மாதிரி உங்களயும் ஒரு சமூக சேவகனா பாக்க ஆசபடுறேன் சார்.
ரஜினிகாந்த்
இவர ஏன் தான் எல்லாருக்கும் பிடிக்குதோ எனக்கும் தெரியல
வடிவேலு சார்.
குருவையும்
நட்பையும் இவ்வளவு உயரத்துல இருந்தும் மதிக்கிற மனப்பான்மை யாருக்கு சார் வரும்..
எத்தனையோ வாய்ப்புகள் ஆட்சிக்கு வர.., ஆனா அரசியல் என் தொழில் இல்ல னு
ஒதுங்கியதும், மக்களுக்கு உதவி செய்ய அரசியல் மட்டும் வழி இல்ல னு அறிவிச்சதும்,
என்ன ரொம்ப வியந்து பாக்கவச்ச விஷயங்கள்.
ஒரு படம்
வெளிவந்தா திருவிழா மாதிரி கொண்டாடுறதும், உடல் நிலை சரி இல்லனா தமிழ்நாடே
பிரார்த்தனை செய்யுற அளவுக்கு ஒரு மனிதன் மேல அன்பு செலுத்துறாங்கனா அந்த மனுசன்
எவ்ளோ கொடுத்துவச்சவனா இருப்பான்.
யாருக்கு சார்
கிடைக்கும் இவ்ளோ பேரு, புகழ், செல்வம், எல்லாத்துக்கும் மேல எங்க மக்களோட அன்பு..
ராகுல்
ட்ராவிட்
இவருடைய கிரிக்கெட் வாழ்க்கை காட்டும் இவர் எப்படி பட்ட
ஆள் என்று.. ஒருமுறை கூட சர்வதேச கிரிக்கெட் சங்கம் ஒழுங்கீன நடவடிக்கைகாக
தண்டிக்காத ஒரே வீரர் ட்ராவிட் மட்டும் தான். வெற்றியோ தோல்வியோ எதற்கும்
உணர்ச்சிவசபடாதவர்.
அவருடைய
தனிப்பட்ட சாதனைக்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய
பெருஞ்சுவர் ட்ராவிட். சின்ன கிசுகிசுவில் கூட சிக்காமல் எப்படி தான் மனுசன்
வாழ்ந்தானோ..
பொறுமைசாலி,
மிக மிக பொறுமைசாலி.. ஐயா சாமி உனக்கு பந்து போட எங்களால முடியாதுனு எதிரணி
வீரர்களை கதறடிச்ச பொறுமைசாலி..
தன் மீதான
எந்த ஒரு விமர்சனத்தையும் தன் திறமையால் வீழ்த்தியவர்.
RAHUL DRAVID =
DETERMINATION
கமலஹாசன்
எல்லாத்தையும் கத்துக்கிற ஆர்வம் தான் எனக்கு இவருகிட்ட
ரொம்ப பிடிச்ச விஷயம். சினிமா இவரது துறை என்றால் அந்த துறையில் இவருக்கு தெரியாத
விஷயங்கள் இல்லை. எதையும் செய்து பாக்க துணிபவர். அது மக்கள் ஏற்று கொள்ளவில்லை
என்றாலும் சரி தன் முயற்சியை கை விடாத மனிதன்.
இவருடைய வசனங்களுக்கு
நான் அடிமை..
“மன்னிப்பு கேக்குறவன் மனுசன்.. மன்னிக்க தெரிஞ்சவன்
பெரிய மனுசன்.”
“கடவுள் இல்லனு யார்ங்க சொன்னா.. இருந்தா நல்லா
இருக்கும்னு தான் சொல்றோம்.”
ஒரு தடவை ஒரு நிருபர் நீங்க ஏன் அரசியல்க்கு வரலனு
கேட்டாராம்
அதுக்கு கமல்,”எனக்கு நடிக்க தெரியும்ங்க ஆனா அந்த
அளவுக்கு நடிக்க தெரியாது”னு சொன்னாராம்.
உடல் உறுப்புகள் அனைத்தையும் இவர் தானம் செஞ்சப்போ
எனக்கும் அந்த ஆசை வந்தது, அந்த நாள்க்காக காத்துகிட்டு இருக்கேன், ரொம்ப
சீக்கிரம் செஞ்சுடுவேன்னு நினைக்கிறேன்.
தோழர்
நல்லகண்ணு
75000கோடி ரூபாய் ஊழல் சர்வசாதாரணமா நடக்குற இந்த
காலத்துல இன்னும் தூய்மையா இருக்கிற ஒரே அரசியல்வாதி.. ஒரு அரசியல்வாதி இப்படி
தான் இருக்கனும்னு எடுத்துக்காட்டா வாழ்கிற அரசியல்வாதி. அடித்தட்டு மக்களுக்காக
அவர்களுடன் கைக்கோர்த்து போராடும் போராளி..
ஒரு தடவை
புதுக்கோட்டை பக்கத்துல ஒரு மீட்டிங்.., அதுல கலந்துகிட்ட பேசிய தோழரோட பேச்சு
முடிய இரவு 2 மணி ஆச்சாம்..மீட்டிங் முடிஞ்ச உடனே எல்லாரும் கலைஞ்சு
போய்ட்டாங்க.. மறுநாள் காலைல அந்த மீட்டிங் நடந்த இடத்த பார்க்க வந்தவங்களுக்கு
அதிர்ச்சி..
ஒரு மரத்துக்கு அடியில வெறும் தரையில் படுத்து
இருந்தாராம் தோழர். இப்படி ஒரு அரசியல்வாதியை நீங்க காட்ட முடியுமா..
பியர்
கிரில் (BEAR GRYLL)
THE REAL HERO
யாரும் எளிதில் செல்ல
முடியாத வனப்பகுதிகள், கடல் தீவுகள், பனிமலை பகுதிகள், பாலைவனங்கள், எரிமலை
பகுதிகள், நொடிக்கு நொடி மாறும் தட்ப வெப்ப நிலைகள், உணவு என்பதே இல்லாத சூழ்நிலை,
தண்ணீர் இல்லாமல் சிறுநீரையே குடிக்கும் நிலை, உயிர் வாழவே முடியாத நிலைகளில் நீங்கள்
சிக்கிக்கொண்டால் அங்கிருந்து எப்படி உயிருடன் மீண்டு வருவது என கற்றுக்கொடுக்கும்
டிஸ்கவெரி சான்னெல்லின் MAN VS WILD ன் நாயகன்.
ஒரு மணிநேரம்
ஒரு முழுநீள ஹாலிவுட் படம் மாதிரி விறுவிறுப்பு குறையாத நிகழ்ச்சி. எதை சாப்பிட
போறான், எப்படி தங்க போறான், எப்படி தடைகளை கடக்க போறான்னு வியப்பாவே இருக்கும்.
அசைவ உணவு பிரியன் அதுக்காக சிக்கன் மட்டன்லாம் சாப்பிடுவான் நினைக்காதிங்க.. அதுலாம்
அவரு சாப்பிட மாட்டாரு.. பாம்பு, தவளை, சிலந்தி, வெட்டுகிளி, பாக்கவே சகிக்காத
பூச்சி இனங்கள் தான் பிடிக்கும், சாப்டுட்டு அது எப்படி இருந்துச்சுனு வேற
விளக்கம் கொடுப்பாரு.
இவரு கூட ஒரு
தடவை மடகஷ்கார், அமேசான் காட்டுக்குள்ள தொலைஞ்சு மீண்டு வரனும்னு ஆசையா இருக்கு..
வைரமுத்து
இவரு எப்ப கவிதை எழுதுறார்னு கண்டுபிடிக்கனும்.. எப்படி
அந்த கவிதை வருதுனு பாக்கனும்.. கவிதை, நாவல்னு எத எழுதினாலும் எப்படி விருது
வாங்குறாருனு கண்டுபிடிக்கனும்.
இளையராஜா கூட
கைக்கோர்த்து ஒரு தலைமுறையையும், ஏ.ஆர்.ரஹ்மான் கூட சேர்ந்து என் தலைமுறையையும்
இவருடைய பாடல்கள் நனைச்சு போயிருக்கு..
கள்ளிக்காட்டு
இதிகாசம், கருவாச்சி காவியம், பெய்யென பெய்யும் மழை கவிதை தொகுப்பு, இதையெல்லாம்
படிச்சு பாருங்க.., இந்த மனுசன பத்தி வியப்பா பேசாம இருக்க முடியாது..
ஷங்கர்
100% PERFECTION காக உழைக்கிற உழைப்பாளி..
இவருடைய உழைப்பை இவருடைய படங்களின் ஒவ்வொரு சீன்லயும் நாம பாக்கலாம். அவ்ளோ
நேர்த்தியா இருக்கும்.
பாட்டுக்காக
ஒவ்வொரு தடவையும் இவர் கண்டுபிடிக்கிற லொகேசன்ஸ் எப்படி தான்
கண்டுபிடிக்கிறாய்ங்களோ..
பொன்னியின் செல்வன் நாவல்ல நீங்க இயக்கனும்னு எனக்கும்
ஆசையா இருக்கு ஷங்கர் சார்.
ஸ்ரேயா
கோஷல் (SHREYA
GHOSAL)
முதல்முறை இவரின்
பாடல்களை கேட்டதும் இவருக்கு நான் அடிமையாகிவிட்டேன். அழகான பாடகி..
தேவ்தாஸ் ஹிந்தி படம் தான் முதல் படம் அதுல ஐஸ்வர்யா
ராய் வர ஐந்து பாடல்கள் பாடுனது இவங்க தான்.., அதுக்காக நேஷ்னல் அவார்டும் வின்
பண்ணாங்க.. தமிழ்ல முதல் பாட்டு “செல்லமே செல்லம்...” பாடல் ஆல்பம் திரைப்படத்திற்காக
கார்த்திக்ராஜா இசையில பாடுனாங்க..
தமிழ்
தெரியாத ஒரு பாடகி தமிழ்ல அச்சுர சுத்தமாக உச்சரித்து பாடுவது தான் எனக்கு இவங்கக்கிட்ட
ரொம்ப பிடிச்சது..
ஒருவேள நான்
ஏ.ஆர்.ரஹ்மான்க்கு பாட்டு எழுதுனா.. அந்த பாட்ட ஸ்ரேயா தான் பாடனும்னு அடம்
பிடிப்பேன்.
சாய்னா
நேவால் (SAINA
NEHWAL)
என் விளையாட்டு காதலி
சாய்னா..
இந்தியாவில் கிரிக்கெட் தவிற வேற எந்த விளையாட்டுக்கும்
வரவேற்பு கிடையாது என்கிற கருத்தை உடைச்சவங்க.. நீங்க உங்க விளையாட்டுல உங்க
திறமையை மிகச்சரியா வெளிப்படுத்துங்க.. உங்கள அவங்க தலைமேல தூக்கிவெச்சு
கொண்டாடுவாங்கனு நிரூபிச்சவ என் சாய்னா..
காதல்
திருமணம் தான் செய்வேன்னு சொல்றா.. பாப்போம் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குதானு..
யுவ்ராஜ்
சிங்
உலகக்கோப்பை தொடர்
நாயகன்.. தன்னம்பிக்கை நாயகன்..
சச்சினுக்கு
அப்புறம் யுவி ஷாட்ஸ் தான் ஸ்டைலிஷ்..
யுவி அறைசதம்
அடிச்சா இந்தியா தோத்ததே கிடையாது..
அப்படி ஒரு மேட்ச் வின்னெர்.
கேன்சர்னு கேள்வி
பட்டதும் நான் ஆடி போய்ட்டேன்.. ஆனா அத போராடி தோக்கடிச்சு திரும்பி இருக்காரு..
திரும்ப ஒரு ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்.
ஐஷ்வர்யா
ராய்
என்று உலக அழகி பட்டம் வாங்குனாங்களோ அன்றிலிருந்து
இன்று வரை இவங்க எது செஞ்சாலும் நியூஸ்.. இந்தியாவுல அழகுனா இதுவரைக்கும் அடுத்த
வார்த்த ஐஷ்னு தான் இருக்கும். இப்போ கொஞ்சம் வெயிட் போட்டு இருக்காங்க.. உலகமே
கொண்டாடுன ஒரு அழகிய எனக்கும் பாக்கனும்னு ஆச இருக்காதா..
விஷ்வநாதன்
ஆனந்த்
ஒரே ஒரு கேம்
இவர் கூட விளையாடனும்..
ஒரு விளையாட்டில் 48 சர்வதேச விருதுகள் வென்றுள்ள ஒரே
இந்திய வீரன். இதை நீங்கள் படிக்கும் இந்த தருணத்திலும் அவர் இன்னொரு வெற்றிக்காக
போராடி கொண்டிருக்கிறார். இன்னும் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றால் இம்முறையும்
உலக சாம்பியன் இந்த தமிழன்.