Sunday, 22 April 2012

சிறகின் நினைவுகள்..

எங்களுக்கு பிடித்த தமிழ்ச்செல்வி mam காக இந்த கவிதை...




எங்கெங்கிருந்தோ
சின்னஞ்சிறிய பறவைகள்
கொண்டு வந்து விடப்பட்டன
ஒரு பெரிய சரணாலயத்தின்
சின்னஞ்சிறிய கூட்டில்...

கண்ணில் மிரட்சியுடனும்,
நெஞ்சில் கலக்கத்துடனும்
சிநேகம் வளர்க்க
சுற்றி முற்றி பார்த்தது
சின்னஞ்சிறிய பறவை ஒன்று...

தாய்மொழி தவிர
பிறமொழி அறிந்திராத தயக்கம்.
தனக்கு தெரிந்த
அரைகுறை ஆங்கிலத்தில்
விலாசம் விசாரித்தது
விசால பார்வையுடன்...

ஜார்க்கண்ட் என்றது ஒன்று
பீகார் என்றது மற்றொன்று
பாண்டிச்சேரி பாஸ் நீங்க
என்று எதிர் கேள்வி இட்டது ஒன்று
தஞ்சாவூர் என சொல்லிவிட்டு
மறுதிசை திரும்பியதும்
கேள்விக்காக பொறுத்திராமல்
இங்கேயே தான்
சிங்கார சென்னை என்றது ஒன்று
நமக்கு நாமக்கல் என்றது மற்றொன்று..

ஒவ்வொரு பறவையும்
ஒவ்வொரு விதம்
புறப்பட்ட இடத்தினால் மட்டும் அல்ல..

அடக்க நினைக்கும் ஒன்று
எனக்கென்னவென்று திரியும் மற்றொன்று
புலம்பி திரியும் ஒன்று
புரிந்து குழப்பும் மற்றொன்று
பேசியே கொல்லும் ஒன்று 
பேசாமலேயே கொல்லும் மற்றொன்று
கவனம் சிதறாமல் ஒன்று
கனவே உலகம் என்று மற்றொன்று
கூட்டில் நாயகனாக துடிக்கும் ஒன்று
அது அசிங்கப்படும் தருணங்களை
கூட்டத்தில் ரசிக்கும் மற்றொன்று
சுற்றத்தை கலாய்த்து கலகலப்பாய்
வைத்திருக்கும் ஒன்று
சோகமே திருவுருவாய் சோம்பி போய்
மூலையில் உறங்கி கிடக்கும் மற்றொன்று
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் ஒன்று
என்ன திட்டினாலும்
இன்னைக்கி சிக்கன் பிரியாணியா மச்சான்
என கேட்கும் மற்றொன்று

அத்தனையையும் அரவணைத்தது
இரு சிறகுகள்.
சிறகை விரிக்கவும்
உணவை கொறிக்கவும்
அது கற்று கொடுத்தது..

எந்த ஒரு தருணத்திலும்- அது
எங்களை விட்டுக்கொடுத்ததேயில்லை
நாங்களும் யாருக்காகவும் அதை
விட்டு கொடுக்கவில்லை..

தடுமாறி விழுந்தோம் சில சமயம்
தட்டி கொடுத்தது அந்த சிறகு..
ஏன்.. என்னாச்சு.. என
அது கேட்கும் போதே
மனசு குறுகுறுக்கும்,
அடுத்த வெற்றிக்கு
அஸ்த்திவாரமாய் அது அமையும்..

வெளி உலகில் எங்களை விட்டு
எங்கள் திறமையை
சோதித்து பார்க்க சொன்னது..
முதல் பரிசு பெற்று திரும்பியவுடன்
எங்களைவிட அது அதிகம் கர்வம் கொண்டது..
என் பசங்க prize won பண்ணி இருக்காங்க
என்று முகத்தில் மலர்ச்சியுடனும்
கண்ணில் பெருமிதத்துடனும்- அது
சொல்லிய தருணத்தை
புகைப்படம் எடுக்க தவறிவிட்டோம்- ஆனால்
நெஞ்சில் புதைத்து வைத்துகொண்டோம்..

சிறகை விரிக்கும் காலம் வந்தது
அனைத்து சிறு பறவைகளும்
அழகாய் பறக்க தொடங்கிவிட்டன..
சில பறவைகள்
விண்ணை தாண்டி
விண்வெளி தொடவும் தயாராகிவிட்டன..

இனி அந்த அரவணைத்த சிறகிற்கும்
கூட்டிற்கும்
சரணாலயத்திற்கும்
தொடர்பில்லை என்ற போது
சிறகில் சுமை வைத்தது போல் ஆகிற்று..

பறவைகள் கண்ணீர்
சிந்துவது இல்லையாம்- யார் சொன்னது
இங்கே வந்து பாருங்கள்
நாங்கள் கண்ணீர் சிந்துவதை..


என்றும் உங்கள்
மறவா நினைவுகளுடன்
நானும்
என் நண்பர்களும்.. .



















2 comments:

  1. macha paditha nodiyil piditha kavithai ithu than.. yella feel um iruku.. Nanga ipadi oru kavithai kudupa nu expect pannavae illa.. Na dinesh kitta sollum bothu vilayata sonnen.. Last day ivalo sandhoshama irukum nu expect pannala.. thanks macha :-)

    ReplyDelete
  2. vidunga vidunga ithulam ethirpakkama nadkkurathu.. appappa ippadi than ethaiyavathu nalla eluthiduven..

    ReplyDelete