தபுசங்கர்
அவருடைய வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்... கவிதை தொகுப்பை ஒரு பயணத்தின் போது என் நண்பன் அன்பு எனக்கு அறிமுகப்படுத்தினான். ஒவ்வொரு கவிதையையும் திரும்ப திரும்ப படிக்கும் போது, நான் காதலிக்காத போதும் அந்த உலகிற்குள் என்னை நுழைத்து ஆட்டிவைத்த காதல் மந்திரக்கோல் அந்த கவிதை தொகுப்பு...
என்ன மனுஷன் டா அவன்.., எப்படி எல்லாம் ரசிச்சு இருக்கான்..
அவன் மனுஷன் டா எப்படி ரசிச்சு இருக்கான் பாரேன்..
நிறையமுறை இப்படி எல்லாம் வியந்தது உண்டு...
நான் கவிதை என்ற பெயரில் எதையோ எழுதுவதற்கு இவரும் ஒரு காரணம்..
இவரை போல எழுத நினைத்து எழுதியவை ஏராளம். ஒன்று கூட அப்படி வந்ததாய் தோன்றவில்லை..
தேவதைகளின் தேவதை இதுவும் ஒரு காதல் மந்திரக்கோல்..
காதலித்து கொண்டே இருங்கள்...
http://www.eegarai.com/ebooks/books/devathaikalindevathai.pdf
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்.. கவிதை தொகுப்பிலிருந்து..
எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
நீ வருவதற்காவே காத்திருக்கிறேன்
என்னை கடந்து போவதற்காவே வருகிறாய்
அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன
நீ நடந்து போன சுவடின்றி
அமைதியாக கிடக்கிறது
சாலை
அதிவேக ரயிலொன்று கடந்துபோன
தண்டவாளம் போல் அதிர்கிறது
என் இதயம்
No comments:
Post a Comment