Monday, 26 March 2012

விளங்காத வினா


முகநூளின்( facebook) பக்கங்களை எல்லாம்
புரட்டி புரட்டி எடுக்கிறேன்..,
தவிப்பும் சிலிர்ப்பும் கொஞ்ச நேரம் 
கடுப்பும் வெறுப்பும் மிச்ச நேரம்..

பின்ன என்னங்க..,
காக்கா கலர்ல இருக்கிறது எல்லாம்
கத்ரீனா கைப் இமேஜ் வச்சு இருக்கு..

கிழவிக்கு எல்லாம்
பார்பிகேர்ள் ப்ரோபைலா இருக்கு..

இந்த ப்லோவேர்ஸ், பேபி எல்லாம்
என்ன பாவம் செஞ்சுசோ தெரில
அதையும் விட்டு வைக்கிறது இல்ல..

அட இது பரவாயில்லங்க,
ஒரே ப்ரோபைல் பிக்சர்ல 
32  fake  ப்ரோபைல்ஸ்...

எதுக்குங்க இப்டி கொஞ்சம் தெரிஞ்சா சொல்லுங்களேன்...

யாழிக்கு கவிதைகள்

என்னை தேடுவாள்
நான் பார்ப்பேன்
சில நாட்கள் பயணித்தோம்...
புன்னகை புரிவாள்
புரியாமல் தவிப்பேன்
சில நாட்கள் பயணித்தோம்..
காற்றில் விரல் அசைத்து
"ஹாய்" என்றொரு
கவிதை சொல்வாள்
சில நாட்கள் பயணித்தோம்..


உனக்கு என்ன பிடிக்கும்..
என்னிடம் கேட்டாள்..


நட்பு பிடிக்கும் என்றேன்
நண்பர்களை பிடிக்கும் என்றாள்..
காதல் பிடிக்கும் என்றேன்
காதலர்களை பிடிக்கும் என்றாள்..
இசை பிடிக்கும் என்றேன்
இசைப்புயலை பிடிக்கும் என்றாள்..
கவிதை பிடிக்கும் என்றேன்
கவியரசை பிடிக்கும் என்றாள்..
உன்னை பிடிக்கும் என்றேன்..
உன் புன்னகை பிடிக்கும் என்றாள்..

Saturday, 24 March 2012

சினிமா


அலைபாயுதே VS விண்ணை தாண்டி வருவாயா..


 


காதலுக்குள் சிறு சிறு ஊடல்களும் அதன் விளைவுகளும்தான் இந்த இரு திரைப்படங்களின் திரைக்கதை..
காதலை தக்க வைத்து கொள்ளும் தவிப்பு அலைபாயுதே...
காதலை ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பு விண்ணை தாண்டி வருவாயா...

ரெண்டு படத்துலயும் ஹீரோ பேரு கார்த்திக் ஏன் னு தான் தெரில..

ரெண்டு படத்துக்கும் மியூசிக் ரஹ்மான் சார்.. ரெண்டு படத்துக்கும் வெயிட் மியூசிக் தான்.. வேற யார்ட்ட கொடுத்து இருந்தாலும் சத்தியமா இந்த அளவுக்கு பெஸ்ட் ஆ வந்து இருக்காது..
"எவனோ ஒருவன்" அலைபாயுதே-வின் அழகு என்றால் "மன்னிப்பாயா" மனதை வருடும் மயிலிறகு..
 இரு திரைப்படங்களிலும் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றபோதிலும் எனக்கென்னவோ அலைபாயுதே பெஸ்ட் னு தோணுது  ஏன்னா
வித்தியாசமான தருணங்களில் இடம் பெரும் பாடல்கள்.

"ஒருவேள காதலோ.."
"சும்மா பாத்தா காதல் வருமா.. பைத்தியகாரத்தனம்.."
"பின்ன எதுக்கு காலைல 8 .55 க்கு பாத்த பையன பத்தி நைட் 10 .30 மணிக்கு பேசுற.. "

"நான் உன்ன விரும்பல.. உன் கூட வாழனும்-னு ஆச படல.. நீ அழகா இருக்க னு நினைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு..."

"எனக்காக எது வேணாலும் செய்வியா.. "  
"என்ன TRAIN ல இருந்து குதிக்க சொல்றியா.. " 
"இல்ல என்ன கல்யாணம் பண்ணிக்கோ.."
இயல்பான, தேர்ந்துதெடுக்கப்பட்ட வசனங்கள்..


"கடவுள்ட்ட வேண்டிக்கிறேன் உனக்கு அசிங்கம, மக்கா, ஒரு பொண்டாட்டி கிடைக்கணும் னு.. " 

"இன்னைக்கி நமக்கு FIRST  நைட்.." 
"நான் மளிகை கடைல இருக்கேன்.." 
"SO .. " 
"SO குட் நைட் "
"HAI பொண்டாட்டி.."

இது போன்ற சில்மிஷ சீண்டல்களும் உண்டு..


"இந்த ஈகோ-வ எல்லாம் தூக்கி தூர எறி.. இந்த காதல் னா என்ன.. பீச் ல பாத்து பார்க் ல கட்டிபுடிச்சு.. சினிமா பார்ப்பதா.. அது காதல் இல்ல டா... அது ப்ரேமம் இல்லடு..   கல்யாணத்துக்கு முன்னாடி வரது ஒரு மயக்கம்.. பூ மாதிரி.. கிக் ஆ இருக்கும், வாசனையா இருக்கும்.. ஆனா    வாடி போயிடும்.  கல்யாணத்துக்கு பின்னாடி வருதுல அது வேர்.. வேர் மாதிரி STRONG ஆ இருக்கும் ""எது நடந்தாலும் விட்டு கொடுத்து போ.."
 வசனத்தில் அசத்தல் அலைபாயுதே..



"இங்க என்ன சொல்லுது.. ஜெஸ்சி.. ஜெஸ்சி.. னு சொல்லுதா.."


"வொர்த் ஆ இல்லையா.." 
 "உயிர கொடுக்கலாம் சார்.."


 "யாரும் இது வரைக்கும் உன்ன வெரட்டுனதே இல்லையா.. ரவுண்டு கட்டி நின்னு இருப்பானுகலே பசங்க.. மொக்க figure கே தலைகீழா நிப்பாணுக.. " 
"உன் கண் வழியா அவங்க என பார்க்கல போலஇருக்கு.. "

 இது எல்லாத்துக்கும் மேல..,

"உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் சார் ஜெஸ்சி ய லவ் பண்ணேன் "
இந்த ஒரு வரில OUT OF THE PARK SIXER அடித்து விடுகிறார் கௌதம்..

so ..    diolouge ல பெஸ்ட் விண்ணை தாண்டி வருவாயா..



மாதவனுக்கு அறிமுகமே அழகாய் அமைந்ததில் அதிர்ஷ்ட்டம்..
சிம்புக்கு VTV SECOND இன்னிங்க்ஸ்.. யாரு பெஸ்ட் னு சத்தியமா எனக்கு சொல்ல தெரியலங்க..

நாம தினமும் கடந்து போற எலெக்ட்ரிக் TRAIN தேவதை ஷாலினி..
கனவுகளின் தேவதை த்ரிஷா.. இதுல யாரு பெஸ்ட் னு சொன்னா பிரச்சன தான் வரும் so .. வேணாம்..

காதல் ல ஜெயிச்சவங்களுக்கு அலைபாயுதே..
காதல் ல தோத்தவங்களுக்கு விண்ணை தாண்டி வருவாயா..
ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ரெண்டு படத்தையும் எப்ப போட்டாலும் பாத்துகிட்டே இருப்பேன்...









Friday, 23 March 2012

யாழிக்கு கவிதைகள்

அவள் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கும் தருணத்தில்
forward message அனுப்பும்
நண்பன் மட்டும்
கைல கிடைச்சான்...

   

யாழிக்கு கவிதைகள்

அவள்  என்ன அவ்வளவு அழகா...!?



அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல..
வெள்ளை ஆடை அணிந்து வந்தால்
தேவதை என்பவள்
அவளை போல இருப்பாள்..



Wednesday, 21 March 2012

யாழிக்கு கவிதைகள்

                                                               மழையும் நீயும்..
மழையும் நீயும்..
கண் சிமிட்டாமல் ரசிக்கிறேன்..
இரண்டு அழகும் ஒன்றாய் கலப்பதை..

மழையை கண்டதும்
துளிர் விடும் இலைகள்
உனை கண்டதும் விரியும்
என் விழிகள்..

மழையில் குளித்த இலை
நுனியில் தேக்கி வைத்திருப்பது..
உன் கண்ணீர் துளிகளா.., இல்லை    
குளித்த பின் துடைக்க மறந்த
தேகம் தேக்கி வைத்த நீர்திவலைகளா..


கார்மேகங்களில் ஒளிந்து
மெலிதாய் எட்டி பார்த்தான் சூரியன்
நீ வெட்கப்பட்டு
என்னை பார்ப்பது போன்றே..

வானத்தின் அழுகை
பூமியின் மேல் அது கொண்ட காதல்
எனது அழுகை
நான் உன் மேல் கொண்ட காதல்..

வானத்தின் கண்ணீர் துளிகளை
ரசிக்கிறேன் நான்
என் கண்ணீர் துளிகளை
நீ ரசிப்பாயோ..!?

ஓர் இனிய மாலை நேரத்தில்
மதி மயங்கி
இருவரும் கலந்த போது
மேகங்கள் போர்வீரர்களை அனுப்பியது
நம்மை  பிரிக்க..
மழைத்துளிகள் அனைத்தும் முயற்சித்தது
நம் இடையே செல்ல..
அனைத்தையும் தோற்கடித்துவிட்டோம்
ஆனால் வியர்வை துளிகளை...

உயிரை சிலிர்க்க வைக்கும்
உன் மூச்சு காற்று பட்டு
உயிர் காற்றை சுவாசிக்க மறந்து
தவிக்கிறது தேகம்..

மேகமாய் தேக்கி வைத்த
நீரை எல்லாம்
அழுது தீர்த்தது வானம்..
தேக்கி வைத்த அழுகையை எல்லாம்
முத்தங்களாய் தீர்த்தேன் நான்..  

யாழிக்கு கவிதைகள்

                                                    உனக்காக ஒரு கவிதை..
உனக்காக ஒரு கவிதை எழுத
உலகம் தனித்து
உறவை மறந்து
உன்னை மட்டும் நினைத்து
உயரே சென்றேன்..

காற்றை மட்டும் துணையாய் கொண்டு
காடு நோக்கி நகர்ந்தேன்..
காற்றுடன் சிநேகம் பேசி
காதலை சொல்ல
வார்த்தைகள் கேட்டேன்..

காதோரமாய் கிசுகிசுத்த காற்று
நான் எழுத போகும் கவிதைகளுக்கு
மெட்டு தந்தது..

அருவியின் சாரலில்
மனதின் கறைகள் மறைந்தன..
கறைகள் எனும் கவலைகள் மறைந்தன..

கரைகள் இல்லா காட்டாறு
கடலை நோக்கி படையெடுக்க
மடைகள் உடைத்து
மனம் சென்றது
வார்த்தைகளை தேடி..

அருவி போல்
கொட்டிய வார்த்தைகளில்
உன்னை நனைக்க நினைத்தேன்
ஆனால் சாரல் மட்டும்
எடுத்து வந்தேன்..

கவிதை எழுதும் முன்னே
ஜோடி குயில்கள் இரண்டு
காற்றின் மெட்டிற்கு
ராகம் பாடியது..

ஆயிரம் கவிதைகள் எழுதினேன்
கம்பனின் கற்பனைகளை
கடன் வாங்கி...
ஒன்றும் பிடிக்காமல்
ஒற்றை வார்த்தையில் எழுதினேன்
காதல் என்று..

நான் எழுந்ததும்
காற்றின் மெட்டிற்கு
குயில்கள் பாடின
காதல் காதல் என்று...

யாழிக்கு கவிதைகள்

                                     காத்திருப்பு 

உனக்காக காத்திருக்கும் நேரங்களை..
கவிதையில் வடிக்க சொல்கிறாய்,
கவிதை தொகுப்பாய் நீள்கிறது அன்பே..